கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் !

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரத்தில், துரைமுருகனின் மகனும் வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த்திற்கும் துரைமுருகன் சகோதரருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. உலகெங்கும் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், தீவிர கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

Related Stories:

More
>