×

வாலாஜாபாத் ஒன்றியம் தாங்கி ஊராட்சியில் புதிய நியாய விலை கடை: எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தார்

வாலாஜாபாத், மார்ச் 26: வாலாஜாபாத் ஒன்றியம் தாங்கி ஊராட்சி இங்கு 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சியில் ஒன்றிய பள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம், நூலகம், நியாய விலை கடை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் இங்குள்ள நியாய விலை கடை இட நெருக்கடியில் செயல்பட்டு வந்த நிலையில் இந்த நியாய விலை கடையில் மக்களுக்காக வரப்படும் பொருட்கள் அதிக அளவில் சேமிக்க முடியாத நிலையில் காணப்பட்டன.  இதனை அடுத்து இப்பகுதி மக்கள் உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தரிடம் புதிய நியாய விலை கடை கட்டித்தர வேண்டுமென கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின் அடிப்படையில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றன. விழாவிற்கு ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் கலந்து கொண்டு ₹15.78 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையினை திறந்து வைத்து. சக்கரை உள்ளிட்ட பொருட்கள் மக்களுக்கு விநியோகம் செய்து துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் அப்பொழுது மக்கள் எங்கள் பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் ஒன்று அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர். அதனை கேட்ட எம்எல்ஏ சுந்தர் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், மாவட்ட கவுன்சிலர் பொற்கொடி செல்வராஜ் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்து சுந்தரம் ,ராஜ்குமார் ஒன்றிய குழு கவுன்சிலர் சஞ்சய் காந்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நீலாவதி உட்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்….

The post வாலாஜாபாத் ஒன்றியம் தாங்கி ஊராட்சியில் புதிய நியாய விலை கடை: எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : New Fair Price Shop ,Wallajabad ,Union Thangi Panchayat ,MLA ,Sundar ,Walajabad ,Thangi Panchayat ,Union ,Panchayat ,Walajabad Union Thangi Panchayat New Fair Price Shop ,
× RELATED புதர்மண்டிய தொள்ளாழி பள்ளி கூடம்,...