திருவாரூர் ரயில்நிலைய வளாகத்தில் கிழிந்த நிலையில் பறக்கும் தேசியக்கொடி: புதிதாக மாற்ற மக்கள் கோரிக்கை

திருவாரூர்: பழமை வாய்ந்த திருவாரூர் ரயில் நிலைய வளாகத்தில் பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி கிழிந்த நிலையில் காணப்படுவதால் அதனை புதிதாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில் உபயோகிப்பாளர் ஆலோசனை குழு உறுப் பினர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் ரயில் நிலையம் முன் ரயில்வே துறை சார்பில் நூறு அடி உயரம் கொண்ட பிரமாண்டமான கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு அதில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பட்டொளி வீசி பறந்தது.

இதற்கான முயற்சிகளை எடுத்த ரயில்வே துறை அதிகாரிகளை பொதுமக்களும், ரயில் பயணிகளும் வெகுவாக பாராட்டினர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இயற்கை பேரிடர் மற்றும் கடும் வெயில் காரணமாக தேசியக்கொடியின் ஓரங்கள் கிழிந்தும், கொடியின் வண்ணங்கள் மங்கியும் உள்ளது. இது நெருடலை ஏற்படுத்தியுள்ளதோடு இதனை காணும் பயணிகள் மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ரயில்வே அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு சேதமடைந்த தேசியக்கொடியை புதிதாய் மாற்றித் தரவேண்டும் என்றார்.

Related Stories:

>