×

கொரோனா பரவுவதால் தேவையின்றி மாணவர்களை பள்ளிக்கு அழைக்க கூடாது: பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவும் அபாயம் அதிகரித்து வருவதால், எக்காரணம் கொண்டும் மாணவ, மாணவியரை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ளதால், மாணவர்களை பள்ளிக்கு அழைக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்துள்ளது. மேலும், சுகாதாரம், சுற்றுச்சூழல், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகள், கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி போன்றவற்றை காரணம் காட்டி எந்த பள்ளி மாணவர்களையும் பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்காக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் தனியாக ஒரு  உத்தரவையும் போட்டுள்ளார். இந்த உத்தரவு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Tags : Do not invite students to school unnecessarily because of corona spread: School Education Action Order
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...