கிருஷ்ணகிரி அருகே பெரியார், அம்பேத்கர் படங்கள் அவமதிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பெரியார், அம்பேத்கர் படங்கள் அவமதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி அருகே மோட்டூர் கிராமம் அம்பேத்கர் காலனி, மின் மோட்டார் அறையின் சுவரில் அம்பேத்கர் மற்றும் பெரியார் உருவம் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களை ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் புதுப்பித்து, அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் இன்று (புதன்கிழமை) அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக, பெரியார் மற்றும் அம்பேத்கர் படங்களை அப்பகுதி மக்கள் வர்ணம் தீட்டி புதுப்பித்து உள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர், அம்பேத்கர் மற்றும் பெரியாரின் ஓவியங்களில் சாணி கரைசலை ஊற்றி விட்டுச் சென்றனர்.

நேற்று காலை இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்படி கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>