×

கோடை வெப்பத்தால் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் கிடுகிடு சரிவு: விவசாயிகள் கவலை

சின்னாளபட்டி: கோடை வெப்பத்தால், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. நீர்த்ேதக்கத்தின் உயரம் 23.5 அடியாகும். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள புல்லாவெளி, மணலூர், பெரும்பாறை உள்ளிட்ட பகுதியில் பெய்யும் மழைநீர் இந்த நீர்த்தேக்கத்திற்கு வந்து சேரும். இந்த நீர்த்ேதக்கம் மூலம் அப்பகுதிவிவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். சுமார் 3 லட்சம் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த நீர்த்தேக்கம் உள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததாலும், கோடை வெயில் காரணமாகவும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 17.8 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை. நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து திண்டுக்கல் மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘‘காமராஜர் நீர்த்தேக்கத்தில் உள்ள 17.8 அடி தண்ணீரை வைத்து கோடை காலத்தை சமாளிக்க வேண்டும். கோடைமழை பெய்தால் அணையின் நீர்மட்டம்  உயர வாய்ப்புள்ளது’’ என்றார்.

Tags : Attur Kamaraj Reservoir , Summer, Attur Kamaraj Reservoir, Water Level Decline, Farmers
× RELATED மலைப்பகுதிகளில் தொடர் மழை ஆத்தூர்...