×

ஆலத்தூர் தாலுகா பகுதியில் பலத்த மழை இடி தாக்கியதில் 2 பசு மாடுகள் பலி

பாடாலூர் : ஆலத்தூர் தாலுகா பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் இடி தாக்கியதில் இரண்டு பசு மாடுகள் இறந்தன.
ஆலத்தூர் தாலுகா பகுதியில் நேற்று மதியம் திடீரென கோடை மழை பரவலாக பெய்தது. இதில் பாடாலூர் அருகே இடி தாக்கியதில் இரண்டு பசுமாடுகள் இறந்தன.

ஆலத்தூர் தாலுகா பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் சுட்டெரித்தது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே மிகவும் அச்சம் அடைந்தனர். கோடை வெயிலால் வெப்பம் அதிகரித்து பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று பகல் ஆலத்தூர் தாலுகா பகுதி உள்ள பாடாலூர், திருவிளக்குறிச்சி, இரூர், ஆலத்தூர் கேட் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் பரவலாக மழை பொழிந்தது. இதனால் ஓரளவிற்கு வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை ஏற்பட்டது.

இந்த கோடை மழை பெய்தபோது அதிக சத்தத்துடன் இடி மின்னல் ஏற்பட்டது. அப்போது ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே உள்ள திருவிளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் (60) மரத்தடியில் கட்டியிருந்த இரண்டு பசு மாடுகளும் மின்னல், இடி தாக்கி இறந்தன. இறந்த பசு மாட்டின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

Tags : Alathur taluka , Badalur: Heavy rains lashed Alathur taluka. Two cows died in the thunderstorm.
× RELATED பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷன்...