×

மக்கள் கொந்தளிப்பு எதிரொலி.... உன்னாவ் பாலியல் குற்றவாளியின் மனைவிக்கு வழங்கிய சீட்டை வாபஸ் வாங்கிய பாஜக!!

லக்னோ : உன்னாவ் பலாத்கார வழக்கு குற்றவாளியின் மனைவியான சங்கீதா சென்கரை பஞ்சாயத்து தேர்தலில் வேட்பாளராக்கிய பாஜக, அந்த அறிவிப்பை எதிர்ப்பின் காரணமாக வாபஸ் பெற்றது. உத்தரபிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் செங்கரால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளான குல்தீப் செங்கர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் குல்தீப் செங்காரை குற்றவாளி என தீர்ப்பளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. மேலும், இளம்பெண்ணின் தந்தை உயிரிழப்பு தொடர்பாக குல்தீப் செங்கருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ .10 லட்சம் அபராதமும் தனியாக விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநில உள்ளாட்சி தேர்தல் வருகிற  ஏப்ரல் 15 முதல் 4 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தேர்தல் முடிவு மே 2 ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 5 மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில் பாலியல் பலாத்கார குற்றவாளியான குல்தீப் செங்கரின் மனைவி சங்கீதாவுக்கு, ஃபதேபூர் சவுராசி திரிதாயா தொகுதியில் இருந்து போட்டியிட சீட் வழங்கப்பட்டது. உ.பி அரசுக்கு எதிராக அமையும் உ.பி அரசுக்கு எதிராக அமையும் சங்கீதா கடந்த 2016 முதல் 2021 வரை உன்னாவோவின் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார். ஆனால் பாலியல் பலாத்கார குற்றவாளியின் மனைவிக்கு பாஜக சீட் கொடுத்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, தனது அறிவிப்பை பாஜக நேற்று வாபஸ் பெற்றது.சங்கீதா சென்கருக்கு பதிலாக வேறு ஒருவர் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : BJP ,Unnao , உன்னாவ்
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...