காளையார்கோவில் அருகே ரூ.4.8 கோடி செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சிக்கியது

சிவகங்கை: காளையார்கோவில் அருகே 4.8 கோடி ரூபாய் செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி வரலட்சுமி தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் பழைய செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன.

செல்லாத ரூபாய் நோட்டுகளை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலமாக மாற்றி தருவதாக சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த அருள் சின்னப்பன் கூறி இருக்கிறார். இதை நம்பி வரலட்சுமி தனது தம்பி அசோக்குமாருடன் செல்லாத ரூபாய் நோட்டுகளை 3 பைகளில் நிரப்பிக்கொண்டு காரில் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு சிவகங்கை சென்றார். வளையம்பட்டி கிராமத்தில் உள்ள அருள் சின்னப்பன் வீட்டிற்கு இவர்கள் வந்தது பற்றி ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அருள் சின்னப்பன் வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர்.

Related Stories:

>