×

ஏப்ரல் 18ம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் பண பரிவர்த்தனை சேவை செயல்படாது : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை : வருகிற 18ம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் ( RTGS) முறையில் பண பரிவர்த்தனை செய்ய முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. NEFT சேவையில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும்.  அதற்கு மேல் அனுப்ப வேண்டும் என்றால், RTGS சேவையைத்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய நடைமுறையில்,  RTGS சேவையை வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் பயன்படுத்த முடியும்.

இந்த நிலையில் வருகிற ஞாயிற்றுகிழமை 14 மணி நேரம் RTGS முறையில் பண பரிவர்த்தனை செய்ய முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறும் என்பதால், ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை பணபரிவர்த்தனை நடைபெறாது. அதே சமயம் NEFT முறையிலான பண பரிவர்த்தனை தடையின்றி செயல்படும். இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் முன்னதாகவே பரிவர்த்தனையை திட்டமிட வங்கிகள் அறிவுறுத்த வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.


Tags : RTGS ,RBI , ஆர்டிஜிஎஸ்
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!