×

விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுப்பு

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரைக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுகிழமைகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வார நாட்களான இன்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. மெரினா கடற்கரைக்கு செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. அந்த வகையில் மெரினா கடற்கரைக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுகிழமைகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. ஞாயிற்றுக்கிழமையான இன்று மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது.

மெரினா காமராஜர் சாலையில் இருந்து கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்லும் பாதைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. கலங்கரை விளக்கம் அருகிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து இருந்தனர்.

இதனை தாண்டி யாரும் சர்வீஸ் சாலை மற்றும் மணல் பரப்புக்கு செல்ல முடியாத அளவுக்கு போலீசார் தீவிரமாக இன்று அதிகாலையில் இருந்தே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நடைபயிற்சிக்கு வந்தவர்களும் மெரினா கடற்கரையில் ‘வாக்கிங்’ செல்ல அனுமதிக்கப்படவில்லை.

Tags : Marina Beach , corona
× RELATED நாளை மறுநாள் முதல் கலைஞர் உலகத்திற்கு அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு