கபினி அணையில் இருந்து கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு: விவசாய பணிகளில் மும்முரம்

சாம்ராஜ்நகர்: கபினி அணையிலிருந்து கல்வாய்க்கு தண்ணீர் திறந்துள்ளதால் விவசாயிகள் விவசாய பணிகளை ஆரம்பித்துள்ளனர். சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகா பெல்லஹள்ளி கிராமத்தில் உள்ள கபினி கால்வாய்க்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதில் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் தங்களின் தோட்டங்களில் சோளம், கரும்பு உட்பட பயிர்களை பயிரிடும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் பெல்லஹள்ளி கிராமத்துக்கு கால்வாயில் தண்ணீர் திறந்துள்ளது போல் தாலுகாவில் உள்ள அனைத்து கால்வாய்களுக்கும் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது,  எலந்தூர் தாலுகாவில் சில கிராம பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இதில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல் தண்ணீர் பிரச்னை காரணமாக விவசாய பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் பெல்லஹள்ளி கிராமத்துக்கு தண்ணீர் திறந்தது போல் எங்கள் பகுதியிலும் திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தனர்.

Related Stories:

>