×

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: துணை முதல்வர் வேண்டுகோள்

பெங்களூரு: கொரோனா பரிசோதனையை 10 ஆயிரம் வரை உயர்த்த வேண்டும் என்று துணை முதல்வர் அஷ்வத்நாராயண் தெரிவித்தார். பெங்களூரு மேற்கு மண்டல மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பது தொடர்பாக துணை முதல்வர் அஷ்வத்நாராயண் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: ``மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே போல் கொரோனா பரிசோதனையை 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  

இத்துடன் ஆரம்ப சுகாதார மையங்களில் குறைந்த பட்சம் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை கூட அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கண்டறியப்பட்டு வருவதால் பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வர வசதியாகவுள்ளது. கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 7.5 லட்சம் குறியாகவுள்ளது’’ என்றார்.


Tags : Deputy CM , Corona experiment
× RELATED புதிய கலால் கொள்கை வழக்கில் 8 பேருக்கு...