×

கோயில் திருவிழாவுக்காக 15 நாட்கள் மட்டும் பிராமணராக தீட்சை பெறும் தலித் குடும்பம்

துமகூரு: கடந்த 850 ஆண்டுகளுக்கு முன் பெண் ஒருவர் கொடுத்த சாபம் காரணமாக கோயில் திருவிழாவுக்காக 15 நாட்கள் மட்டும் தலித் குடும்பத்தினர் பிராமணராக தீட்சை பெறும் வழக்கம் நடந்து வருகிறது. மாநிலத்தின் துமகூரு மாவட்டம், குனிக்கல் தாலுகா, ஹுலியூர்துர்கா ஒன்றியத்தில் உள்ள உஜ்ஜனி கிராமத்தில் கடந்த 850 ஆண்டுகளுக்கு முன் பிராமண வகுப்பை சேர்ந்த குடும்பம் வசித்து வந்தது. அக்கிராமத்திற்கு வந்த தலித் வகுப்பை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை பிராமணர் என்று அறிமுகப்படுத்தி கொண்டார். பின் அக்குடும்பத்தினருடன் நட்பு ஏற்படுத்தியதுடன், சில ஆண்டுகளில் அதே குடும்ப பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இத்தம்பதிகளுக்கு 6 பிள்ளைகள் பிறக்கிறார்கள். இந்நிலையில் தனது மகன் பிரமாணர் குடும்பத்தில் இருப்பதை தெரிந்து கொண்ட தலித் இளைஞரின் தாய், தனது மகனை வீட்டிற்கு அழைத்து செல்ல தீர்மானித்து உஜ்ஜனி கிராமத்திற்கு வந்தார். தாய் வருவதை பார்த்த அவரது மகன், உடனடியாக தனது தாயிக்கு பிராமண வகுப்பு பெண்கள் அணியும் மாதிரியில் சேலை உடுத்தி அழைத்து வந்தார்.

ஆனால் அவரின் நடையுடையில் பிராமண பெண்களுக்கான எந்த தோற்றமும் தெரியாததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் கேள்வி எழுப்பியதும் தான் தலித் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை ஒப்புகொண்டார். இதில் கோபமடைந்த தலித் இளைஞரின் மனைவி’’ நீயும், உன் பிள்ளைகளும் தலித்தாக இருங்கள், எனக்கு திதி கொடுக்கும் போது மட்டும் பிராமணராக மாறுங்கள்’’ என்று சாபமிட்டு தீயில் குதித்து தனது உயிரை மாய்த்து கொண்டாள். அவரின் நினைவாக கடந்த 850 ஆண்டுகள் அந்த தலித் இளைஞர் குடும்ப வாரிசுகள் ஆண்டுதோறும் 15 நாட்கள் பிராமணராக தீட்சை பெற்று கோயில்களில் பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதன்படி ஒவ்வொரு ஆண்டுகள் கன்னடர்களின் புத்தாண்டு தினமாக யுகாதி பண்டிகை முடிந்த இரண்டாவது நாள் முதல் 15 நாட்கள் சாஸ்த்திர, சம்பிரதாய ஆச்சாரங்கள் படி 6 தலித் குடும்பங்கள் பிராமணராக தீட்ைச பெறுகிறார்கள். அவர்களுக்கு பிராமண புரோகிதர்கள் தீ்ட்சை செய்து வைக்கிறார்கள். அதன்படி இவ்வாண்டு தீ்ட்சை பெறுபவர்கள் உஜ்ஜனியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று பூஜை செய்வார்கள். தினமும் மூன்று வேளை குளியல், கோயில் மூலவருக்கு அபிஷேகம் செய்வது, நெய்வேதியம் கொடு்ப்பது உள்பட பல சேவைகள் செய்கிறார்கள். நாளை முதல் ஹெப்பரகுட்டேவில் தங்கும் அவர்கள் வரும் 28ம் தேதி வரை பூஜை செய்தபின், தங்கள் குல வாரிசுக்கு திதி கொடுத்தபின் தீட்சை முடித்து கொள்கிறார்கள்.

Tags : Brahmin , Karnataka Hindu Nadar
× RELATED பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்