கர்நாடக இந்து நாடார் அசோசியேசன் மாதாந்திர கூட்டம்

பெங்களூரு: கர்நாடக இந்துநாடார் அசோசியேசன் ஏப்ரல் மாத கூட்டம் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது. இதில் பேசிய தலைவர் சந்திரசேகரன் பெங்களூரு தமிழ்ச்சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தலைவர் கோ.தாமோதரன், துணை தலைவர் பழனி, செயலாளர் சம்பத், பொருளர் இளங்கோவன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய துணை தலைவர் சுரேஷ்குமார், பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகம் தமிழர்களின் கையில் மீண்டும் வந்துள்ளது.

இது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஷகிலா சுரேஷ்குமார் சங்கத்தின் வளர்ச்சியில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக துணை செயலாளர் ஜவஹர் வரவேற்க, பொருளாளர் சித்தானந்தன் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில் ராஜலிங்கம் நன்றியுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

Related Stories:

>