பித்தப் பை கற்களை அகற்ற சரத் பவாருக்கு ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு (80) பித்தப் பையில் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 30ம் தேதி என்டோஸ்கோப்பி முறையில் பித்தப்பபையில் இருந்து ஒரு கல் அகற்றப்பட்டது. இதையடுத்து சரத் பவார் 7 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் 15 நாட்களுக்குபந் பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து வீட்டுக்கு திரும்பிய சரத் பவார் ஓய்வு எடுத்தார். ஞாயிற்றுக்கிழமை அவர் மீண்டும் பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாகவும் சரத் பவாரின் உடல் நலம் இப்போது நன்றாக இருப்பதாகவும் மகாராஷ்டிரா  மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்தார்.

Related Stories:

More