×

ரபேல் முறைகேடு வழக்கு 2 வாரத்தில் விசாரணை

புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று ரபேல் ஒப்பந்தத்தில் விமானத்தை தயாரிக்கும் நிறுவனம் மூலமாக இந்தியாவை சேர்ந்த இடைதரகருக்கு ₹9.5 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், ‘இடைத்தரகருக்கு விமான நிறுவனம் சார்பாக 9.5கோடி கொடுக்கப்பட்டது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இரண்டு வாரங்களுக்கு பின்னர் விசாரணை நடத்தப்படும் என கூறி உத்தரவிட்டனர்.

Tags : Raphael , Raphael abuse case 2 week trial
× RELATED கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்த வீரர்!