×

தெலங்கானாவில் வனத்துறை இடத்தில் வேலி அமைக்க சென்ற அதிகாரிகளை மரத்தில் கட்டி வைத்து அடித்த மக்கள்: வைரலாகும் வீடியோ

திருமலை: தெலங்கானாவில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வேலி அமைக்க சென்ற அதிகாரிகளை கிராமமக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. தெலங்கானா மாநிலம், பத்ராத்திரி கொத்தகூடம்  மாவட்டம், தும்முகுடம் மண்டலம், கோட்டூர் அருகே உள்ள சிந்தகுப்பா கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் வேலி அமைக்க வனத்துறை அதிகாரிகள் நேற்று காலை சென்றனர். அப்போது, கிராமமக்கள் ‘‘நாங்கள் காலம் காலமாக இங்கு விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலத்தில் நீங்கள் எப்படி வேலி அமைப்பீர்கள்’’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திடீரென அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வனத்துறை அதிகாரிகளை தாக்கினர். மேலும், அதிகாரிகளை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இதையறிந்த தும்முகுடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வனத்துறை அதிகாரிகளை மீட்டனர். மேலும், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Telangana , People tie up a tree to beat up forest officials in Telangana: a viral video
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து