×

உச்ச நீதிமன்றம் உத்தரவு: ஐஎன்எஸ் விராட் கப்பலை உடைக்க தடை விதிக்க மறுப்பு

புதுடெல்லி: ஐஎன்எஸ். விராட் போர்க்கப்பலை பாதுகாக்க கோரிய தனியார் நிறுவனத்தின் மனுவை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்திய கடற்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய ஐஎன்எஸ். விராட் விமானம் தாங்கி போர்க்கப்பல் 2017ம் ஆண்டு ஜூலையில் கடற்படையில் இருந்து விடுவிக்கப்பட்டது. இதனை  38.54 கோடிக்கு ஏலத்தில் எடுத்த ஸ்ரீராம் குரூப் தனியார் நிறுவனம் கடந்தாண்டு செப்டம்பரில் குஜராத்தின் அலங்க் பகுதியில் உள்ள கப்பல் உடைக்கும் தளத்திற்கு கொண்டு சென்றது. இதனிடையே விராட் கப்பலை அருங்காட்சியகமாக மாற்றுவதற்காக  100 கோடிக்கு வாங்க என்விடெக் மரைன் கன்சல்டன்ஸ் தனியார் நிறுவனம் முடிவு செய்தது. ஆனால், இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.

இந்நிலையில், விராட் கப்பல் தேசிய சொத்து. உலகம் முழுவதும் போர் கப்பல்கள் பாதுகாக்கப்பட்டு, அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளன. எனவே, அது அருங்காட்சியமாக்கப்பட வேண்டும் என்று என்விடெக் மரைன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்ஏ. பாப்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, என்விடெக் மரைன் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் ரூபாலி சர்மா, விராட் கப்பலை உடைக்கும் பணி எந்தளவில் உள்ளது என்பதை ஆய்வு செய்ய விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு ஸ்ரீராம் குரூப் நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜிவ் தவான், கப்பலின் 40 சதவீதம் உடைக்கப்பட்டு விட்டது.

முக்கிய பாகங்களும் அகற்றப்பட்டுள்ளன. அருங்காட்சியமாக மாற்ற மத்திய அரசு தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்ததுடன், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது,’’ என பதிலளித்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ``மும்பை உயர் நீதிமன்றம் அரசுக்கு மீண்டும் விண்ணப்பிக்குபடி ஏற்கனவே அறிவுறுத்தியது. மத்திய பாதுகாப்புத்துறை உங்களது நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரித்தது. இந்நிலையில், உங்களது நிறுவனம் மீண்டும் விண்ணப்பித்திருக்க வேண்டியதில்லை. எனவே உங்களது மனு நிராகரிக்கப்படுகிறது,’’ என்று கூறி மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.




Tags : Supreme Court ,INS Virat , Supreme Court order: INS Virat refuses to ban shipwreck
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...