×

பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக சத்யகோபால் நியமனம்

சென்னை: சத்யகோபாலை, பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்து டெல்லி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. கிரிஜா வைத்தியநாதனுடன், வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற சத்யகோபாலும், பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவருக்கு புனேயில் உள்ள மேற்கு மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, கே.சத்யகோபால் மறு உத்தரவு வரும் வரை தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக செயல்படுவார் என்று டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து சத்யகோபால் நேற்று முதல் சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Tags : Satyagopal ,Green Tribunal , Satyagopal appointed as an expert member of the Green Tribunal
× RELATED அமோனியா வாயு கசிவு வழக்கில் உரிய...