மூமுக, அதிமுகவை சேர்ந்த கும்பகோணம், ஆத்தூர் தொகுதி வேட்பாளர்களுக்கு கொரோனா

சென்னை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக மூமுக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் நிறுத்தப்பட்டுள்ளார். வாக்குப்பதிவு முடிந்த சில தினங்களில், உடல் நலம் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர் வாண்டையாருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்றுமுன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தஞ்சை யில் தனது உறவினர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>