மதுரையில் ஹோமியோபதி மருத்துவர் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியது தொடர்பாக பதிலளிக்க காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

மதுரை: மதுரையில் ஹோமியோபதி மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவலர்களுக்கு மனித உரிமைகள் ஆணையம் சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மதுரை கூடல் நகர் பகுதியை சேர்ந்த வர்மருத்துவர் தமிழரசன். இவர் மதுரை அரசு மருத்துவமனையின் கொரோனா அவசர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி இரவு பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் மருத்துவர் தமிழரசன் சென்றுள்ளார். அப்போது பீபி.குளம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், மருத்துவரின் வாகனத்தை மறித்து ஆவணங்களை பரிசோதித்துள்ளனர். அப்போது போலீசாரிடம் தனக்கு பணிக்கு நேரமானது எனக் மருத்துவர் கூறியதால், ஆத்திரமடைந்த போலீசார் அவரைத் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நேற்றைய மதுரை மாநகர் போலிஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் மருத்துவர் தமிழரசன் புகார் மனு ஒன்றை அளித்தார். ஆனால், அங்கிருந்த போலீசார் என்னிடம், தகாத வார்த்தைகளைப் பேசி மிரட்டினர். மேலும் நான் முகக்கவசம் அணியவில்லை எனக்கூறி அபராதம் விதித்தனர். என்னை ரோட்டில் வைத்து ஆக்ரோஷமாக மாறி மாறி முகத்தில் அடித்தனர். பின்னர் என்னை வலுக்கட்டாயமாக தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு இழுத்துச்சென்றனர். அங்கு 1 மணி நேரத்திற்கும் மேலாக உட்கார விடாமலும், தண்ணீர் கூட கொடுக்காமலும் நிற்க வைத்ததாக மருத்துவர் தமிழரசன் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியே சென்று கூறினால் வழக்குப்பதிவு செய்வோம் என்று மிரட்டியதாகவும், மருத்துவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக காவல் ஆணையர் விரிவான அறிக்கையை 3 வாரத்திற்குள் அளிக்குமாறு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>