×

கொரோனா இரண்டாவது அலை எதிரொலி அலையாத்திகாடுகளுக்கு சுற்றுலா செல்லதடை: முத்துப்பேட்டை வனத்துறை உத்தரவு

முத்துப்பேட்டை: கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதால் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளுக்கு செல்ல வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரபரபளவுக் கொண்ட காடாகும். இந்த காடு புயல் மற்றும் சூறாவளி காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களையும் கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன. மேலும் கடலோரங்களில் எற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது. மொத்தம் முத்துப்பேட்டை பகுதியில் 11,885,91 ஹெக்டேர் பரப்பளவில் காணக்கூடிய இக்காடுகள் திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் பரவி உள்ளது. காவிரி ஆற்றுப்படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திகாடுகள் அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை நீண்டுள்ளது.

இந்த முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூரப் பயணம் செல்வது பயணிப்பவர்களின் மனதை சொக்க வைக்கும். இருபுறமும் அடர்ந்து படர்ந்து கிடக்கும் அலையாத்திகாடுகளின் இயற்கை அழகு அவர்களை மெய்மறக்க வைக்கும். உள்ளே சென்றதும் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகளின் அழகாக பிரமிக்க வைக்கும். ஆங்காங்கே தென்படும் பறவைகளின் கூச்சல் சத்தம் நம்மை ரசிக்க வைக்கும். அதனால் இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மற்றுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் தற்பொழுது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக தமிழக அரசு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது இதன் எதிரொலியாகஇந்தியாவின் அறிய பகுதியாகவும், தமிழ்நாட்டின் மிகப் பெரிய சுற்றுலா தளமாக கருதப்படும் முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மறு அறிவிப்பு வரும் வரை வனத்துறை தடைவிதித்துள்ளது.

இதுகுறித்து முத்துப்பேட்டை வனச்சரக அலுவலர் தாகீர் அலி கூறுகையில்: நமது நாட்டின் மிகப்பெரிய காடான இப்பகுதியில் உள்ள அலையாத்திகாடு இப்பகுதி மக்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். அலையாத்தி காடுகளை காண தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இந்நிலையில் தற்பொழுது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் இந்த நோயிலிருந்து பாதுக்காக்கும் வகையில் நேற்று (11ம் தேதி) முதல் அலையாத்திக் காட்டுக்கு சுற்றுலா செல்லவும், சுற்றுலா பயணிகள் படகுகள் செல்லவும் மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் அதனால் சுற்றுலா பயணிகள் யாரும் வந்து ஏமாற வேண்டாம் என்றார்.

Tags : Muthupet Forest Department , Tourist ban on corona second wave echo nomadic forests: Muthupet Forest Department order
× RELATED கஜாபுயலின் சீற்றத்தால் காடு அழிந்த பகுதியில் 1000 அலையாத்தி மரக்கன்று நடவு