எஸ்.பாறைப்பட்டி ஊராட்சியில் ஒரே இடத்தில் 10 குடிநீர் குழாய்கள்: தண்ணீர் பிடிக்க கிராம பெண்கள் அவதி

சின்னாளபட்டி: ஆத்தூர் அருகே, ராமநாதபுரம் கிராமத்தில் ஒரே இடத்தில் 10க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்களை அமைத்துள்ளதால், பெண்கள் தண்ணீர் பிடிக்க சிரமப்படுகின்றனர். எனவே, வீடு தோறும் குடிநீர் குழாய்கள் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆத்தூர் ஒன்றியம், எஸ்.பாறைப்பட்டி ஊராட்சியில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊர் மைதானத்திலும், மேல்நிலை குடிநீர் தொட்டி அடியிலும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர 10க்கும் மேற்பட்ட குழாய்களை ஒரே இடத்தில் பொருத்தியுள்ளனர்.

மேலும் குடிநீர் பிடிக்கும் இடங்களில் குழிகளை பறித்து அதில் குடங்களை வைத்து தண்ணீர் பிடிக்கும் அவலநிலை உள்ளது. மேலும், ஒரே இடத்தில் குடிநீர் குழாய்களை அமைத்துள்ளதால், பெண்கள் தண்ணீர் பிடிப்பதற்கு சிரமப்படுகின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம் வீடுதோறும் குடிநீர் இணைப்புகளை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கிராமத்தில் ஒரே இடத்தில் 10க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்களை அமைத்துள்ளனர். இதனால், பெண்கள் தண்ணீர் பிடிக்க சிரமப்படுகின்றனர். எனவே, வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories:

>