×

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் குப்பை குவிப்பு: பயணிகளுக்கு சுகாதாரக்கேடு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால், பஸ்நிலையம் குப்பை மேடாக மாறி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகளுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல்லில் உள்ள பஸ்நிலையத்தில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இங்கிருந்து வெளியூர்களுக்கும், சுற்றுப்புற கிராமங்களும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், பஸ்நிலையத்தில் ஓரிடத்தில் குப்பைகளை குவித்து வருகின்றனர்.

இதன் அருகில் டீக்கடை மற்றும் பழக்கடைகள் உள்ளன. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு சுத்தத்தை வலியுறுத்தி வரும் நிலையில், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ்நிலையத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இப்பகுதியில் வரும் வெளியூர் பயணிகள், உள்ளூர் பொதுமக்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்லும் அவலம் உள்ளது. பயணிகளுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, பஸ்நிலையத்தில் குப்பை குவிப்பதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Dindigul , Garbage accumulation at Dindigul bus stand: Unhealthy for passengers
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...