அண்ணன், தம்பியை திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ., விசாரணை

ஈரோடு: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் இருளர் தெருவை சேர்ந்த குப்பன் மகள் ரேவதி (20). இவர், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சிறுவலூர் பெரியண்ணகவுண்டர் வீதியை சேர்ந்த சக்திவேல் என்பவரை திருமணம் செய்து வசித்து வந்தார். ஆனால், சக்திவேலுடன் 5 மாதம் வாழ்ந்த ரேவதிக்கு, சக்திவேலின் தம்பி அரவிந்தனுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருணம் செய்து கொண்டனர். சக்திவேலின் திருமணத்தை பஞ்சாயத்துதாரர்கள் முன்னிலையில் முறிவு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அரவிந்தனும், ரேவதியும் கடந்த ஒன்றரை மாதமாக சிறுவலூரில் உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தனர்.

கடந்த 9ம் தேதி ரேவதி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அரவிந்த் வேலை முடிந்து இரவு வந்து பார்த்தபோது வீட்டில் சேலையால் ரேவதி தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார். திருமணம் ஆன 9 மாதத்தில் ரேவதி தற்கொலை செய்து கொண்டதால், கோபி ஆர்.டி.ஓ.வும், சிறுவலூர் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: