கோடை வெயில் கொளுத்துவதால் வறண்டு கிடக்கும் குற்றால அருவிகள்

தென்காசி: குற்றாலத்தில் கோடை வெயில் காரணமாக மழை இல்லாததால் அருவிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது. குற்றாலம் அருவிகளில் கடந்த மாதம் வரை தண்ணீர் ஓரளவு நன்றாக விழுந்தது. கோடை காலத்தில் பெய்த மழை சற்று கை கொடுத்ததால் அருவிகளில் தண்ணீர் விழுந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குற்றாலம் பகுதியில் மழை இல்லாததால் வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை இல்லை.

இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது. மெயினருவி, புலியருவி ஆகியவை வறண்டு காணப்படுகிறது. பழைய குற்றால அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் பாறையை ஒட்டினாற் போன்று சிறிதளவு தண்ணீர் கசிகிறது. அருவிகளில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.

Related Stories:

>