24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு ஏமாற்று வார்த்தை : ஜவாஹிருல்லா

சென்னை : 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு ஏமாற்று வார்த்தைகளாக மாறி உள்ளன என்று தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார்.இந்நிலையில் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு ஏமாற்று வார்த்தைகளாக மாறி உள்ளன.தேர்தல் வரை வழங்கப்பட்ட மும்முனை மின்சாரம் அதன்பிறகு நிறுத்தப்பட்டதால் பயிர்கள் கருகும் நிலை உருவாகியுள்ளது. குறுவை சாகுபடிக்கு சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>