×

அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா பதவிக்காலம் முடிந்தது

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து புதிய  துணைவேந்தர் எப்போது நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அண்ணா பல்கலை துணை வேந்தராக 2018ல் சூரப்பா நியமிக்கப்பட்டார். இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர், பாஜ ஆதரவாளர் என்று எதிர்ப்பு கிளம்பியது. இவர் துணைவேந்தர் ஆனதில் இருந்து அண்ணா பல்கலைக் கழகத்தில் பல பிரச்னைகள் எழுந்தன. அண்ணா பல்கலைக் கழகம் நடத்தி வந்த பொறியியல் கவுன்சலிங்கை நடத்த மாட்டேன் என்று சூரப்பா பகிரங்கமாக அறிவித்தார். அதன் மூலம் மாநில அரசுக்கும் அவருக்கும் இடையே பனிப்போர் மூண்டது.

மூன்று ஆண்டு காலம் பணியில் நீடிக்க வேண்டிய அவர் மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்தபோது அவர் மீது விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தான் அவரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை ஆளுநர் நியமித்துள்ளார். விரைவில் அந்த குழு புதிய துணை வேந்தரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அவர் இன்று பல்கலைக் கழகத்துக்கு வருவாரா அல்லது அடுத்த துணை வேந்தரை நியமிக்கும் வரையில் அந்த பதவியில் நீடிப்பாரா என்ற விவரங்களை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிடவில்லை.

Tags : Anna University ,Vice Chancellor Surappa , Anna University Vice Chancellor Surappa's tenure has come to an end
× RELATED தன்னை சுற்றி சக்திவாய்ந்த பெண்கள்...