டிராவிட் இன்னொரு முகம் தோனிக்கு தெரியும்: இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்

மும்பை: இந்திராநகர் ரவுடி டா என ராகுல் டிராவிட் காரில் நின்றுகொண்டு சத்தம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  கிரிக்கெட் வட்டாரத்திலும் , மற்ற இடங்களிலும்  மிகவும் அமைதியான, மிஸ்டர் கூல் ஆக அனைவரும் அறிந்த  டிராவிட், இந்த விளம்பரத்தில் முற்றிலும் கோபமாக நடித்திருப்பதுதான் அந்த விளம்பரம் அதிகமாக பேசப்படுவதற்கான  காரணம். விளம்பரத்தில் கோபத்துடன் வசனங்களைப் பேசும் டிராவிட், கோபத்தின் உச்சக்கட்டத்தில்  காரின் ஸைடு மிரரை ஆக்ரோஷமாக அடித்து உடைக்கும்  காட்சிகள்  இடம்பெற்றுள்ளன. அவர் இந்த  விளம்பரத்தில் நடித்திருப்பது ரசிகர்களை மட்டுமன்றி  இந்திய அணி கேப்டன் விராட் கோலி, கிரிக்கெட் வீரர் நடராஜன் ஆகியோரையும்  வியக்க வைத்துள்ளது.

இந்த விளம்பரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில்  பகிர்ந்த, விராட் கோலி, ``ராகுல் பாயின் இந்த பக்கத்தை ஒருபோதும் பார்த்ததில்லை என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் டிராவிட் கோபமாக இருந்ததை நான் பார்த்துள்ளேன். அதுவும் தோனி மீது கோபப்பட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார். இது தொடர்பாக சேவாக் கூறுகையில், “ நான் டிராவிட் கோபத்தை பார்த்துள்ளேன். இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடிக்கொண்டிருந்தது. தோனி அப்போதுதான் இந்திய அணிக்குள் வந்திருந்தார். தோனி போட்டியின் போது தூக்கியாட நினைத்து பாயிண்ட் திசையில் கேட்சாகி அவுட்டானார். தோனியிடம் டிராவிட் மிகவும் போவப்பட்டார். ‘ நீ இப்படித்தான் ஆடுவியா? நீ ஆட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என ஆங்கிலத்தில் திட்டிக்கொண்டிருந்தார்.

நான் அப்படியே அந்த இடத்தை விட்டு பின்வாங்கினேன். புயல் போன்று ஆங்கில வார்த்தைகளை டிராவிட் உதிர்த்துக்கொண்டிருந்தார். எனக்கு அதில் பாதி வார்த்தைகள் புரியவில்லை. அடுத்த போட்டிகளில் தோனி பெரிய அளவில் நிறைய ஷாட்டுகளை அடிக்கவே இல்லை. நான் தோனியிடம் சென்று உனக்கு என்னாச்சு என்று விசாரித்தேன். மறுபடியும் டிராவிட்டிடம் திட்டு வாங்க நான் விரும்பவில்லை. ஆட்டத்தை அமைதியாக முடித்துவிட்டு திரும்புவதையே விரும்புகிறேன் என கூறினார்.

Related Stories:

>