திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே சாலை பணி முடக்கம்; மக்கள் தவிப்பு

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியம் பாண்டரவேடு கிராமத்தில் இருந்து  குப்பமிட்ட கண்டிகை வழியாக ராமாநாயுடு கண்டிகைக்கு ஊராட்சி வரை சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு ஒன்றிய தார்ச்சாலை அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக தார்ச்சாலை முழுவதும் ஜேசிபி.எந்திரம் கொண்டு உடைத்துவிட்டு பின்னர் ஜல்லி கற்கள் கொட்டி சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதன்பிறகு திடீரென சாலை அமைக்கும் பணி முடங்கியது. இதனால் ஜல்லி கற்கள்  ஆங்காங்கே சிதறிக்கிடப்பதால் வாகனங்கள் ஓட்டமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். நடந்து செல்கின்றவர்களும் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் சாலை பணிகளை  மேற்கொள்ள நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். ‘பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை பணியை உடனடியாக முடிக்கவேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்’ என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>