×

தடுப்பூசி போட்டுக் கொண்டால் சொத்து வரியில் சலுகை : டெல்லி மாநகராட்சி அறிவிப்பு

புதுடெல்லி: தடுப்பூசி போட்டுக் கொண்டால் சொத்து வரியில் சலுகை வழங்கப்படும் என்று டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக, தலைநகர் டெல்லியில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது. தொற்றுநோய் பரவலை தடுக்க முதல்வர் கெஜ்ரிவால் அரசு தடுப்பூசி ேபாடும் பணியை தீவிரப்படுத்தியது. ஆனால், தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் முன்வரவில்லை. அதனால், தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், வடக்கு டெல்லி மேயர் ஜெய் பிரகாஷ், பம்பர் சலுகையை அறிவித்துள்ளார்.

அதாவது, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால், அவர்களின் சொத்து வரியில் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், ‘வீட்டின் உரிமையாளர் மற்றும் தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றை வழங்க வேண்டும். பின்னர் சொத்து வரி சலுகையை பெற விண்ணப்பிக்கலாம். இதற்காக மாநகராட்சிக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடுகளின் உரிமையாளர்கள் மற்றும் வரி செலுத்துபவர்களுக்கு சொத்து வரியில் 5% தள்ளுபடி வழங்கப்படும். வரும் ஜூன் 10ம் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிக்கு ‘பீர்’ இலவசம்
அரியானா மாநிலம் குர்கானில் உள்ள ‘இந்தியன் கிரில் ரூம்’ என்ற உணவகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ெகாரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்று கொண்டு வருவோருக்கு, இலவசமாக ஒரு பீர் வழங்கப்படும். இந்த சலுகை இரண்டு நாட்களுக்கு மட்டும் நடைமுறையில் இருக்கும். தடுப்பூசி போடுவதற்காக மக்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Tags : Vaccine, property tax, concession, Delhi Corporation
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...