கொளுத்தும் வெயிலால் திருவில்லி.யில் களைகட்டும் தர்பூசணி விற்பனை

திருவில்லிபுத்தூர்: கொளுத்தும் வெயிலால், திருவில்லிபுத்தூர் பகுதியில் தர்பூசணி விற்பனை களைகட்டுகிறது. இதனால், மதுரையில் இருந்து சரக்கு வேன்களில் லோடு, லோடாக தர்பூசணிகள் வந்து இறங்குகின்றன. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. அக்னி நட்சத்திரத்தை போல வெயிலின் புழுக்கம் அதிகமாக உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை பொதுமக்களை வாட்டி வதைக்கிறது.

வீசும் காற்றும் அனல் காற்றாக வீசுகிறது. இதனால், பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள, குளிர்பானங்களை குடிக்கின்றனர். தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை சாப்பிடுகின்றனர். இதனால், திருவில்லிபுத்தூர் நகரில் தர்பூசணி விற்பனை களைகட்டியுள்ளது. இதனால், வியாபாரிகள் மதுரையில் இருந்து லோடு, லோடாக தர்பூசணியை இறக்கி விற்பனை செய்து வருகின்றனர்.

Related Stories:

>