×

வாட்டி எடுக்கும் கோடைவெயில் இளநீர் விற்பனை திண்டுக்கல்லில் ஜோர்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கோடை வெயில் அதிகரித்து வருவதால் இளநீர் விற்பனை அதிகரித்துள்ளது. திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பழனி, சென்னமநாயக்கன்பட்டி, ஆத்தூர், தென்னம்பட்டி, வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து விற்பனைக்கு இளநீர் கொண்டு வரப்படுகிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வியாபாரிகள், நடைபாதை, வாகன ஓட்டிகள், மக்கள் என அனைவரும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

கோடை நோய்களிலிருந்து மக்கள் தங்களை காத்து கொள்ள இயற்கை உணவான வெள்ளரி, தர்பூசணி, நுங்கு மற்றும் இளநீரை அதிக அளவில் வாங்கி பருகி வருகின்றனர். தற்போது இளநீர் ரூ.30 முதல் ரூ. 40 வரை விற்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் இளநீர் விளைச்சல் குறைவாக இருக்கும் அதனால் மார்க்கெட்டிற்கு குறைவான இளநீரை விற்பனைக்கு வரும் இதனால் விலையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும், அதே போல் இளநீர், பழங்கள், பழச்சாறு போன்றவை பருகும் போது உடல் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இளநீர் வியாபாரி மாரியம்மாள் கூறுகையில், தற்போது இளநீர் வியாபாரம் நன்றாக உள்ளது. இயற்கை பானமான இளநீரை அதிக அளவில் குடிக்க தொடங்கிவிட்டனர். வியாபாரம் நன்றாக இருந்தாலும் இளநீர் வரத்து குறைவாக உள்ளது என்றார்.

Tags : Jor ,Dindigul , Grabbing, summer, young water, sale, jor
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்