திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் வெறிச்சோடிய பஸ் நிலையம்: குறைந்த பயணிகளே பயணம் செய்தனர்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. குறைந்த பயணிகளே பஸ்களில் பயணம் செய்தனர். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது 2வது அலையாக பரவி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கலெக்டர்  சிவன் அருள் உத்தரவின்பேரில், நேற்று முதல் செயல்படுத்தப்பட்டது. திரையரங்குகளில் 50 சதவீதம் பேர் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. திருமணம் உள்ளிட்டவைகளை 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே இருந்து வந்தனர். சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பஸ் நிலையத்தில் இருந்து பயணம் செய்து வந்தனர்.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் நேற்று திருப்பத்தூர் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்களில் பயணிகள் கூட்டம் இல்லாமல் இருந்தது. மேலும், ஒரு சில பேருந்துகளில் 5 பேர் மட்டும் பயணம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பத்தூர் நகராட்சி சார்பில் ஆங்காங்கே கிருமிநாசினி தெளித்து காய்ச்சல் பரிசோதனை நாளொன்றுக்கு மாவட்டத்தில் 2,500 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு காரணத்தினால் ஆட்டோ மற்றும் கார்களில் பொதுமக்கள் யாரும் கூட்டம் கூட்டமாக செல்லவில்லை. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்டதால் திருப்பத்தூர் பஸ் நிலையம், பஜார் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories:

>