வால்வோ கார் ஓபன் டென்னிஸ்: ஆஷ்லி அதிர்ச்சி தோல்வி

சார்ல்ஸ்டன்: அமெரிக்காவில் நடக்கும் வால்வோ கார் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.) அதிர்ச்சி தோல்வியடைந்தார். உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் இத்தொடரின் கால் இறுதியில், 71ம் நிலை வீராங்கனை பவுலா படோசா (ஸ்பெயின்) - ஆஷ்லி பார்தி நேற்று மோதினர். பார்தி மிக எளிதாக வென்று என்று அரை இறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அபாரமாக விளையாடிய படோசா 6-4, 6-3 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி அதிர்ச்சி அளித்தார். இப்போட்டி 1 மணி, 16 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

சமீபத்தில் நடந்த மயாமி ஓபன் போட்டியில் பார்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அந்த தொடரில் படோசா 2வது சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவா, ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா), டன்கா கோவினிச் (மான்டிநீரோ) ஆகியோரும் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Related Stories:

>