×

வாளையார் சோதனைச்சாவடியில் ரூ.60 லட்சம் சிக்கியது

கோவை: கேரள- தமிழக எல்லையான வாளையார் பகுதியில் கலால் துறை அதிகாரி ஜெயபிரகாஷ் தலைமையில் கலால் துறையினர் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து வாளையார் நோக்கி பைக்கில் வந்த வாலிபரை கலால்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.அப்போது அவர் வைத்திருந்த ரூ.60 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இவர் கோவையில் இருந்து கேரளாவிற்கு தங்க நகை வியாபாரத்திற்காக பணம் எடுத்து செல்வதும் தெரியவந்தது.

Tags : Walayar , 60 lakhs
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சையான், வாளையார் மனோஜ் நீதிமன்றதில் ஆஜர்