×

வரும் 17 முதல் 19 வரை நடக்கிறது: உதவி வேளாண் அலுவலர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: .தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

* பிப்ரவரி 5ம் தேதி உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்ட அலுவலர் மற்றும் வேளாண் அலுவலர், வேளாண் அலுவலர் விரிவாக்கம் ஆகிய பதவிகளுக்கு திட்டமிடப்பட்ட எழுத்து தேர்வு வரும் 17, 18 ஆகிய நாட்களில் காலை மற்றும் மாலையிலும், 19ம் தேதி காலையில் மட்டும் 7 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
* நுழைவுச்சீட்டுகள் . www.tnpsc.gov.in மற்றும் tnpscexams.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டை பெறலாம்
* கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறினால் அவ்வாறான விடைத்தா்ள்கள் தேர்வாணையத்தால் செல்லாததாக்கப்படும்.
* எந்த ஒரு தேர்வரும் காலை நடைபெறும் தேர்விற்கு 9.15 மணிக்கு பின்னர் தேர்வுக்கூடத்திற்குள் நுழையவோ 1.15 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்தில் இருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். பிற்பகலில் நடைபெறும் தேர்விற்கு 2.15 மணிக்கு பின்னர் தேர்வுக்கூடத்தில் நுழையவோ 5.15 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்தில் இருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
* விரைவுத் தகவல் குறியீட்டு செயலி மூலம் ஸ்கேன் செய்து தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை கூகுள் மேப் மூலமாக தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.
* தேர்வு அறைக்கு மொபைல்போனை கொண்டு செல்ல அனுமதியில்லை. எனவே, விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் தங்களது அலைபேசி உட்பட பிற உடமைகளை தேர்வு மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Assistant Agricultural Officer ,DNPSC , tnpsc
× RELATED டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வர்களுக்கு இலவச வகுப்புகள்: கலெக்டர் தகவல்