இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம்: 6 பேர் பரிதாப பலி

ஜகார்தா: இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜாவா தீவில் நேற்று சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியது. கிழக்கு மாகாணத்தில் உள்ள மலாங் மாவட்டத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த பூகம்பம், ரிக்டர் அளவில் 6.0 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இதனால், பாலி உள்ளிட்ட இடங்கள் குலுங்கின. சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில், 6 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

வீடுகளில் இருந்த மக்கள், பூகம்பம் ஏற்பட்டதும் பதறி அடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்ளுக்கு ஓடிச் சென்ற தப்பினர். இந்த பூகம்பத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலச்சரிவு ஏற்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி, இந்தோனேசியா அரசு எச்சரித்துள்ளது.

Related Stories:

>