ஓடி போயிடு கொரோனா: பெண் அமைச்சர் பூஜை

மத்திய பிரதேச மாநில சுற்றுலா மற்றும் கலாசார துறை அமைச்சர் உஷா தாக்கூர். கொரோனா விரட்டுவதற்காக இந்தூர் விமான நிலையத்தில் உள்ள அகல்யா பாய் ஹோல்கர் தேவி சிலைக்கு முன்பு, பாட்டு பாடி, கைத்தட்டி வழிபாடு நடத்தி உள்ளார். இதில், விமான நிலைய கூடுதல் இயக்குனர், ஊழியர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற அமைச்சர் உட்பட யாரும் முகக்கவசம் எதுவும் அணியாமல் வழிபாடு நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முதல் அலை கொரோனாவின் போது, ‘நான் தினமும் வீட்டில் யாகம் வளர்த்து, அனுமன் மந்திரம் சொல்கிறேன். கொரோனா என்கிட்டயே வராது...’ என்று கூறியவர்தான் உஷா.

Related Stories:

>