கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கடலூர் கிழக்கு மாவட்ட மகளிரணி துணை செயலர் சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம்

கடலூர்: கடலூர் கிழக்கு மாவட்ட மகளிரணி துணை செயலர் சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதிமுக வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சியினருக்கு ஆதராக தேர்தல் பணியாற்றியதால் நீக்கம் செய்யப்பட்டதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. பண்ருட்டி நகர மன்ற முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார். மேலும் பண்ருட்டி வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் பெருமாள் நீக்கப்பட்டார். அதேபோல் அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் மார்ட்டின் லூயிஸ் என்கிற பாபு அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் நெல்லிக்குப்பம் நகரச் செயலாளராக உள்ள சௌந்தர் அதிமுக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் வீரப்பெருமாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ராம்குமாரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர்கள் அனைவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ளமதாகவும், கழக உறுப்பினர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More