நோய் தொற்று அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனையை உடனே அணுகவும்-அரியலூர் கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர் : அரியலூர் மாட்டத்தில் நோய் தொற்று அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனையை உடனே அனுக வேண்டும் என்று கலெக்டர் ரத்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் .ரத்னா தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர். தரேஸ் அஹமது, முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்தும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் கலெக்டர் ரத்னா பேசும்போது கூறியதாவது:கொரோனா தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2021 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தற்போதுள்ள நோய் பரவல் நிலை. வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா தொற்றின் தாக்கம், அண்டை மற்றும் இதர வெளிமாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கொண்டு, கொரோனா தொற்றை தடுப்பதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் 30.4.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

நோய் தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். இதனை கடைப்பிடித்து. கொரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories:

>