தேர்வுகளில் தொடர்ந்து குளறுபடி : டிஆர்பி தலைவர்களாக இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஒய்வு தர பரிந்துரை!!

சென்னை : தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஒய்வு தர தலைமை செயலாளருக்கு மாநில தகவல் ஆணையர் பரிந்துரைத்துள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்களாக இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2011-2020 வரை நடைபெற்ற உதவிப் பேராசிரியர், முதுகலை ஆசிரியர் தேர்வுகளில் குளறுபடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. உதவிப் பேராசிரியர் தேர்வில் சரியான விடை அளித்தவர்களுக்கு மதிப்பெண் வழங்காமல் அலைக்கழித்தல், கேள்வித்தாள் வடிவமைப்பில் குளறுபடி, தேர்வர்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்காதிருத்தல் உள்ளிட்ட குற்றம்சாட்டுகள் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது முன்வைக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் ஒரே தவறு திரும்பப் திரும்பப் நடந்து இருப்பதால் 2011-2020 வரை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்களாக இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய பணி ஓய்வில் அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சுர்ஜித் கே. சவுத்ரி, விபு நாயர், காக்கர்கலா உஷா, ஜெகன் நாதன், ஸ்ரீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா ஆகிய 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையர் தலைமை செயலாளருக்கு பரிந்துரை அனுப்பியுள்ளார்.மாநில தகவல் ஆணையர் பரிந்துரை பேரில் தலைமைச் செயலாளர் ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.புகாருக்கு ஆளான 9 ஐஏஎஸ் அதிகாரிகளில் சுர்ஜித், விபு நாயர் தவிர 7 பேர் தற்போது பணியில் உள்ளனர்.

Related Stories:

>