×

மேற்கு வங்கத்தில் மகுடம் சூடப்போவது யார்... இன்று 4ம் கட்ட வாக்குப்பதிவு


கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே, கடந்த மார்ச் 27ம் தேதி முதல் கட்டமாக 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, கடந்த 1ம் தேதி 30  தொகுதிகளுக்கும், 6ம் தேதி 31 தொகுதிகளுக்கும் முறையே 2வது, 3வது கட்டங்களில் வாக்குப்பதிவு நடந்தது. இதனை தொடர்ந்து, இன்று 4வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.


கூச் பெகார், அலிபுர்தூர் மாவட்டம்  மற்றும் தெற்கு 24 பர்கனாஸ் உட்பட சில இடங்களில் வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் 15,940 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 373 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.3ம் கட்ட  தேர்தலில் பல்வேறு இடங்களில் மோதல் வெடித்தது. அதனால், இன்றைய வாக்குப்பதிவு பாதுகாப்புக்கு 789 கம்பெனி துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.  மத்திய அமைச்சர் பபூல் சுப்ரியோ, மாநில அமைச்சர்கள் பார்தா சட்டர்ஜி,  அருப் பிஸ்வாஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.  


Tags : West Bengal , வாக்குப்பதிவு
× RELATED கடும் வெப்ப அலை: மேற்கு வங்க பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை