×

மரியாதை குறைவாக பேசிய மருத்துவரை கண்டித்து மக்கள் சாலை மறியல்

சென்னை: கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கோவி ஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை ராயபுரம் சிமின்டரி சாலையில் உள்ள மாநகராட்சி மினி கிளினிக்கில் மீனாட்சி அம்மன் பேட்டையை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலையில் தடுப்பூசி போடச் சென்றுள்ளனர். அப்போது, தடுப்பூசி இல்லை என்று செவிலியர் மற்றும் மருத்துவரும் அங்கிருந்த ஊழியர்கள் பொதுமக்களை மரியாதை குறைவாக பேசியதால் ஆத்திரமடைந்த 10க்கும் மேற்பட்டோர் ராயபுரம் மேற்கு கல்லறை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், தடுப்பூசிக்கு ஏற்பாடு செய்வதாக கூறியதால் மறியல் கைவிடப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘அரசு அறிவிப்பின்படி நாங்கள் காலை முதல் தடுப்பூசி போடுவதற்காக நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தோம். ஆனால், மருத்துவர்கள் ஊசி போடவில்லை. இதுகுறித்து கேட்டபோது, எங்களை தரக்குறைவாகவாகவும் ஒருமையிலும் பேசுகின்றனர். மேலும், இலவசமாக போடும் ஊசி தானே எப்பொழுது போட்டால் என்ன என்று மிகவும் அலட்சியமாகவே கூறுகின்றனர். மேலும், தகாத வார்த்தையில் பேசியும் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர், என்றனர்.

Tags : Road block
× RELATED திருப்புத்தூர் அருகே கண்மாய்...