×

சென்னையின் 15 மண்டலங்களில் 2,57,851 பேருக்கு தொற்று: பெண்களை விட ஆண்கள் பாதிப்பு சதவீதம் அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வரை 500க்கும் குறைவான நபர்களுக்கு தான் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், மார்ச் மாத இறுதியில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. ஏப்ரல் மாதத்தில் இருந்து கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 1ம் தேதி 2,817 பேருக்கும், 2ம் தேதி 3,290 பேருக்கும், 3ம் தேதி 3,446 பேருக்கும், 6ம் தேதி 3,645 பேருக்கும், 7ம் தேதி 3,986 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, கடந்த 1ம் தேதி 1,083 பேரும், 2ம் தேதி 1,188 பேரும், 6ம் தேதி 1,303 பேரும், 7ம் தேதி 1,459 பேரும் என நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் நேற்று வரை 2,59,320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 2,43,395 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 11,633 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி இதுவரை 4,292 பேர் உயிரிழந்துள்ளனர். 9 வயதுடைய நபர்கள் 1.58%, 10-19 வயதுடைய நபர்கள் 5.4%, 20-29 வயதுடைய நபர்கள் 17.42%, 30-39 வயதுைடய நபர்கள் 19.82%, 40-49 வயதுடைய நபர்கள் 18.49%, 50-59 வயதுடைய நபர்கள் 17.95%, 60-69 வயதுடைய நபர்கள் 11.52%, 70-79 வயதுடைய நபர்கள் 5.70% மற்றும் 80 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் 2.04% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனாவுக்கு பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது ஆண்கள் 59.63%, பெண்கள் 40.37% பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 வயது முதல் 39 வயதுடைய நபர்கள் 19.82% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Chennai , Corona
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...