போயஸ் கார்டன் வீட்டை விசிட் அடித்த சசிகலா

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, தி.நகரில் உள்ள இல்லத்தில் தங்கினார். தீவிர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்த அவர் திடீரென அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். சசிகலாவின் இந்த திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவர் கடந்த மாதம் தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார். அங்கிருந்தவாரே ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த வாரம் சென்னை திரும்பிய சசிகலா, தி.நகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கியுள்ளார். நீண்ட நாட்களாக போயஸ் கார்டனில் தனக்காக கட்டப்பட்டு வரும் வீட்டை நேற்று சசிகலா நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, விவேக் ஜெயராமன் மற்றும் சசிகலாவின் உறவினர்கள் உடனிருந்தனர். வேதா நிலையம் போன்ற அமைப்பிலேயே இந்த வீடு கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஊரடங்கு காரணமாக கட்டிட பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால், 2 மணி நேரம் அங்கேயே இருந்து பணிகளை விரைவில் முடிக்க சசிகலா அறிவுறுத்தியதாக தெரிகிறது.

Related Stories:

>