×

ராணி 2ம் எலிசபெத்தின் கணவர் இங்கிலாந்து இளவரசர் பிலிப் மரணம்

லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் காலமானார். அவருக்கு வயது 99. இளவரசர் பிலிப் கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் இதய நோய்  பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா தொற்று காலத்தில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், அவரது கணவர் பிலிப் வின்ஸ்டர் கேசில் அரசு மாளிகையில் தான் தங்கி இருந்தனர். அவர்களுடன் குறைந்தளவிலான  ஊழியர்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று காலை பிலிப் காலமானார். வின்ஸ்டர் கேசில் அரசு மாளிகையில் அவருடைய உயிர் பிரிந்ததாக அரச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், `வின்ஸ்டர் கேசில் அரண்மனையில் இளவரசரின் உயிர் அமைதியாக பிரிந்தது. தனது ஆரூயிர் கணவர் இளவரசர் பிலிப், டியூக் ஆப் எடின்பர்க் இறந்ததை இங்கிலாந்து  ராணி இரண்டாம் எலிசபெத் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறார்,’ என்று கூறப்பட்டுள்ளது. இளவரசர் சார்லசின் தந்தையான பிலிப், வயது மூப்பினால் 2017ம் ஆண்டு முதல் அரசு பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்து  அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்த பெருமைக்குரியவர் பிலிப்.

பிரதமர் மோடி இரங்கல்
பிரதமர் மோடி தனது இரங்கல் டிவிட்டரில், `எடின்பரக் கோமகனும், இளவரசருமான பிலிப்பின் மறைவுக்கு இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவிக்கிறேன். அரசு பணிகள் மட்டுமின்றி ராணுவத்திலும் சிறப்பாக  பணியாற்றிய இளவரசர் பிலிப்,  பல்வேறு சேவைகள் செய்த புகழுக்குரியவர். அவரது ஆன்மா அமைதியில் இளைப்பாறாட்டும்,’ என்று கூறியுள்ளார்.

Tags : Prince Philip ,England ,Queen Elizabeth II. , Prince Philip of England, husband of Queen Elizabeth II, dies
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்