×

ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்: மோடிக்கு ராகுல் கடிதம்

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதம் வருமாறு: கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க  வேண்டும். தேவைப்படும் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.  கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு தற்போது ஒதுக்கியுள்ள ரூ.35 ஆயிரம் கோடியை இரட்டிப்பாக்க வேண்டும்.  நமது நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை  நிலவும்பட்சத்தில் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி பற்றாக்குறை குறித்து மாநிலங்கள் வெளிப்படையாக கூறும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மட்டுமே குறி  வைத்து மத்திய சுகாதார அமைச்சர் குற்றம்சாட்டுகிறார்.

தங்கள் அரசின் மற்ற முடிவுகளை போல், தனது செல்வாக்கை காட்டுவதற்காக கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுகிறதா? அல்லது சொந்த குடிமக்களின் செலவில் விளம்பரம் பெறுவதற்கான முயற்சியா? நன்கு திட்டமிட்ட, விரைவான  தடுப்பூசி கிடைக்கும் நடவடிக்கையை காங்கிரஸ் ஆதரிக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Rahul ,Modi , Export should be banned: Rahul's letter to Modi
× RELATED மோடியின் பொய்களால் வரலாறுகள் மாறி...