×

சென்னை-பெங்களூருக்கு ஏப்.14ம் தேதி முதல் சதாப்தி சிறப்பு ரயில்

பெங்களூரு: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை- பெங்களூருக்கு வரும் 14ம் தேதியில் இருந்து, சதாப்தி சிறப்பு ரயில்  இயக்கப்படுகிறது. இந்த ரயில், பெங்களூரு கிருஷ்ணராஜபுரத்தில் இருந்து 14ம் தேதி முதல், வாரத்தில், செவ்வாய் தவிர மற்ற நாட்களில், காலை, 6  மணிக்கு புறப்பட்டு, காலை, 11 மணிக்கு, சென்னை சென்ட்ரல் வந்தடையும். சென்ட்ரலில் இருந்து மாலை, 5.30க்கு புறப்பட்டு இரவு 10:25 மணிக்கு  பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் நிலையம் வந்தடையும்.

 ஹூப்பள்ளியில் இருந்து, 14ம் தேதி முதல், வாரத்தில் புதன்கிழமைகளில் இரவு, 9.25 மணிக்கு இயக்கப்படும் விழாக்கால சிறப்பு ரயில், மறுநாள்  காலை, 11.10 மணிக்கு, சென்னை சென்ட்ரல் சென்றடையும். சென்ட்ரலில் வரும் 15ம் தேதி முதல், வியாழக்கிழமைகளில், மாலை, 3:50க்கு புறப்பட்டு,  மறுநாள் அதிகாலை, 5:05 மணிக்கு ஹூப்பள்ளி வந்தடையும். இந்த ரயில்களுக்கு முன்பதிவு, நேற்று முதல் துவங்கியது.

கோவை-பெங்களூரு டபுள் டெக்கர் ரயில்இதேபோல் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பு, ‘கோவையில் இருந்து,  பெங்களூருவுக்கு மீண்டும் டபுள் டெக்கர் ரயில்,இன்று முதல் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக,  பெங்களூருவுக்கு உதய் டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. குளிர்சாதன வசதி உடைய, இந்த இரண்டடுக்கு ரயில், பயணிகள் மத்தியில்  வரவேற்பை பெற்றது. ஊரடங்கால் நிறுத்தப்பட்ட, இந்த ரயில் சேவை இன்று முதல் மீண்டும் துவங்குகிறது.

காலை, 5.45 மணிக்கு கோவையில் புறப்படும் ரயில், மதியம், 12.40 மணிக்கு பெங்களூரு வந்தடையும். அங்கிருந்து மதியம், 2.15க்கு புறப்பட்டு, இரவு,  9 மணிக்கு கோவை சேரும். வாரத்தில் புதன் தவிர மற்ற ஆறு நாட்கள் இந்த ரயில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் கோவை  - சென்னை சதாப்தி சூப்பர் பாஸ்ட், கொச்சுவேலி - பனஸ்வாடி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர்,  ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரத்தில் மட்டும், இந்த ரயில் நிற்கும்’ எனக்கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Bangalore ,Chennai Central , To Chennai-Bangalore The first Sadhapati special train will leave on April 14
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!